Tuesday, January 25, 2011

இதயம் வருடும் அந்த உணர்வை
விழிகள் விறியும் விந்தையை
உடலின் உருப்பனைத்தும் விழிக்கும் விதத்தை
இழப்பும் உவப்பும் புறியாத நிலையை
உலகம் உனக்கு மட்டும் அசையாதிருப்பதை
உ(எ)ன்னை உணர்ந்தேன் இறைவா என்பதன்றி
வேரெப்படி உறைப்பேன் !!!

Thursday, January 6, 2011

என் குரல்...

மனதின் குரல் நம் என்னங்களின் பிம்பம்
நன்பனின் குரல் அதை செதுக்கும் உளி
நேசத்தின் குரல் அதில் பூசப்படும் வண்ணம்
உறவின் குரல் அதை செதுக்கும் அச்சு
குடும்பப் பொறுப்போ புது பிம்பத்தின் அஸ்திவாரம்
இறுதிக் குரல் கேட்டேன் - சற்று வியந்தேன்
அது பல குரல்களின் குழம்பிய சப்தம் என்பதால்
குழப்பம் நிறைந்த ஒரு குருந்தகடா என் மனம் ???

Saturday, May 30, 2009

வேர்கள்...

வேருடன் இடம் பெயரும் செடியென்பர் பெண்களை
இடம் மாறும் வேர் கூட குனம் மாறாது
மணமானால் பெண் மட்டும் நிலை மாறுவதா !
நீர் கொண்ட வேரை நிலம் மாற்றினால் என்னாகும்
தடம் மாறி தவிக்கின்ற என்னைப்போல் தின்டாடும் ...

Monday, November 10, 2008

மணம்...

மனங்களை படிப்பதில் மகிழ்ச்சி கண்டேன்
மணம் என்ற சொல்லை கேட்கும் வரை.
படிப்பதும் பழக்கமும் வேறு என்னும் பாடத்தை
பழகிய வலியோடு வாழ்க்கை உரைத்தது...

Wednesday, March 12, 2008

மனிதனின் தேடல் விசித்திறமானது, அதில் உக்கிரமான சிந்தனைகளை தோண்டிப் பார்ப்பின் அதில் முக்கியமான இடம் பிடிக்கும் உணர்வு கோபம்...
ஒரு மனிதன் இருக்கும் இடத்திலிருந்து அவன் வீழ்வதும் உயர்வதும் அவன் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தை கொண்டு தான் முடிவாகிறது..
என்னை அழித்த கோபத்தையும், அழிக்க முயன்ற கோபத்தையும் இங்கே காணலாம்...

Monday, November 19, 2007

மலர் போல மலர்கின்ற...

Get this widget | Track details | eSnips Social DNA

பிம்பம்...

நேசிக்க தெரிந்த உணர்வை-
உணர வழி இல்லை.
நெஞ்சில் தெரிவது பிம்பம் மட்டுமே
அதை நிஜமாய் பெறவில்லை.
தேடல் சுகமானதே தேடுவது எதுவென்று
தெரியும் வரை.
நினைவை தொலைத்த மனது
நிஜத்தை தேடி அலைகிறது.
நினைவுகள் தொட முடியாத எல்லையில்
என் மனதின் உருவம் உள்ளது-அதை
நேரில் பார்க்கையில் அறிவேனா?
நினைவை மறந்து கடப்பேனா!!!