Wednesday, July 25, 2007

தழல் தான்டிய நினைவு...

சிதை என்று தெரிந்தும் சிரிப்புடன் சென்றேன்-நீ
சிரிக்காமல் வாழ்வதை சகிக்காத காரணத்தால்.
தழல் தனிந்த பின்னும் தலை தூக்கி வந்தேன்-நீ
சிரிப்பதை ஒரு முறை கண்டு ரசிப்பதற்காக...

Tuesday, July 24, 2007

மரணம்...

உடலுக்குள் மரைந்திருக்கும் உயிருக்கு மரணமில்லை
மரணத்தை தழுவிடினும் நினைவுகள் அழிவதில்லை
மரணம் தழுவிடின் உடல் இங்கு மடிந்து போய்விடும்
ஆனால் உயிரின் உணர்வுகள் உலகில் அழிவதில்லயே!!!
இந்த தோற்றமே ஒரு மாற்றம் தான்-அது
மாறும் போது மனித மரணம் மலர்கிறது.

Thursday, July 19, 2007

தீயை தாண்டிய தேடல்...

சுதந்திர நாட்டுக்குள் சுகத்தினை தேடுகிறேன்.
தாயின் அன்பிர்குள் தன்நலம் தேடுகிறேன்.
எட்டாத உயரங்கள் போய் வந்து பார்தாலும்
அதை விட உயரமாய் ஒரிடம் தேடுகிறேன்.

நண்பனை அறிந்தும் நம்பிக்கை தேடுகிறேன்.
உண்மயை அறிந்தும் ஊக்கதை தேடுகிறேன்.
தனிமையில் மனம் புன்னானபோதும்
சொந்ததின்நடுவே தனிமையை தேடுகிறேன்.

சுட்ரமும் நட்பும் சுழ வந்து நின்றாலும்
சாலை ஒரத்தில் நான் தனியாக சென்றாலும்
செல்வங்கள் என்னிடம் கைசேர கிடைத்தாலும்
இனிப்புண்ணும் குழந்தையை போல் இன்னும் இன்னும் தேடுகிறேன்.

எல்லை கோடுகள் இல்லாத ப்ரபஞ்சத்தில்-என்
எண்ணங்கள் மட்டும் வின்மீனாய் சிதர
சந்திர சூரியர்கள் என்னுள்ளே சுழல
முடிவில்லா பாதையிலெ முழு மனதாய் தேடுகிறேன்...

மழை...

ஓடிய துளிகள் இடரி விழுந்திட
இடரிய துளிகளை நிலமகள் தாங்கிட
கண்டேன் இனிய மழையின் ஜனனம்
கண்களின் முன்னே இயர்கையின் பயணம்.