Monday, November 19, 2007

மலர் போல மலர்கின்ற...

Get this widget | Track details | eSnips Social DNA

பிம்பம்...

நேசிக்க தெரிந்த உணர்வை-
உணர வழி இல்லை.
நெஞ்சில் தெரிவது பிம்பம் மட்டுமே
அதை நிஜமாய் பெறவில்லை.
தேடல் சுகமானதே தேடுவது எதுவென்று
தெரியும் வரை.
நினைவை தொலைத்த மனது
நிஜத்தை தேடி அலைகிறது.
நினைவுகள் தொட முடியாத எல்லையில்
என் மனதின் உருவம் உள்ளது-அதை
நேரில் பார்க்கையில் அறிவேனா?
நினைவை மறந்து கடப்பேனா!!!

Saturday, November 10, 2007

மிருகம்...

நிழலினை தீன்டினாலும் உயிர் பரிக்கும்
மிருகம்
ஒரு தவறால் தலை கவிழ்ந்தது
இன்று நிஜமாய் என்னை தீன்டினாலும்
மௌனமாய் நின்றது.
தவறால் நான் கரைவதா?
நிலை மாற்றம் கண்டு மகிழ்வதா?
மிருகம் அழிந்ததால் மகிழ்கிறேன்
அறிய வைத்தவளை இழந்ததால் கரைகிறேன்!!!